AV33 Movie Pooja: குத்து விளக்கு ஏற்றி வைத்த அருண் விஜய்!

4 March 2021, 10:24 am
Quick Share


அருண் விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு நேற்று பூஜை போடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கதைகளுக்கு பேர் போனவர் இயக்குநர் ஹரி. இவரது இயக்கத்தில் சாமி, சிங்கம், சிங்கம் 2, வேல், சாமி ஸ்கொயர், ஆறு, பூஜை என்று ஆக்‌ஷன் படங்களாக வெளியாகியுள்ளன.

சூர்யா, விக்ரம், விஷால் என்று மாஸ் ஹீரோக்களை வைத்து படங்கள் இயக்கியுள்ளார். தற்போது அருண் விஜய்யை வைத்து புதிய படத்தை இயக்குகிறார். அருண் விஜய்யின் 33ஆவது படமான ஏவி33 படத்தை இயக்குநர் ஹரி இயக்குகிறார். இந்தப் படத்திற்கு நேற்று பூஜை போடப்பட்டுள்ளது. இதில், படக்குழுவினர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.


மேலும், நடிகையும், இயக்குநர் ஹரியின் மனைவியுமான பிரீதா விஜயகுமாரும் கலந்து கொண்டார். இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இதற்கு முன்னதாக, மாஃபியா படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும், யோகி பாபு, பிரகாஷ் ராஷ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் பலரும் நடிக்கின்றனர்.


ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பழனி, ராமேஸ்வரம், தூத்துக்குடி, சென்னை ஆகிய பகுதிகளில் அருண் விஜய்யின் பட த்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Views: - 9

0

0