அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி : பார்வையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு : ஆய்வு செய்த அமைச்சர் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 January 2022, 2:21 pm
Avaniyapuram Jallikatu -Updatenews360
Quick Share

மதுரை : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் மூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

உலகப்புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நாளை மறுநாள் வெகு விமர்சையாக 150 பார்வையாளர்களுடன் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாக அவனியாபுரத்தில் நடைபெறுகிறது.

அவனியாபுரத்தில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆயத்த பணிகள் நேற்று முதல் விறுவிறுப்பாக தொடங்கப்பட்ட நிலையில் தற்போது வாடிவாசல் அமைக்கும் பணி, சிறப்பு விருந்தினர்கள் அமரும் மேடை என 70 சதவீத வேலைகள் நிறைவுற்றது.

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தில் வசிக்கக்கூடிய பொதுமக்களிடம் கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளியாட்கள் மற்றும் உறவினர்களை போட்டி நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கக்கூடாது என காவல் துறை சார்பில் நேற்று துண்டுபிரசுரம் வீடு வீடாக வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், மாநகராட்சி அதிகாரிகள், பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் தற்போது நேரில் வருகை தந்து விழா நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

காளைகள் அவிழ்த்து விடும் பகுதி முழுவதும் இருபுறமும் கட்டைகள் அமைக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஜல்லிக்கட்டு காளைகளின் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனை செய்யும் இடம், காளைகள் கொண்டுவரும் வரும் பாதை, மாடுபிடி வீரர்கள் வரும் பாதை என அனைத்து இடங்களிலும் பணிகள் முழுவீச்சில் முடிக்கப்பட்டு வருகிறது.

நேற்று மாலை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்கான ஆன்லைன் பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களுடன் பதிவு செய்யப்பட்ட 300 மாடுபிடி வீரர்கள் மற்றும் 700 காளைகள் அவற்றின் உரிமையாளர்கள், உதவியாளர்களுக்கு மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட உள்ளது.

அரசு வழிகாட்டுதலின் படி கொரோனா பரவல் காரணமாக 150 பார்வையாளர்கள், 300 மாடுப்பிடி வீரர்கள் மற்றும் 700 காளைகள் பங்கேற்க வேண்டும் என்ற அரசு உத்தரவின் பேரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

16ஆம் தேதி நடைபெற இருந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் தொற்று பரவல் காரணமாக 17ஆம் தேதி மாற்றப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்றார்.

இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்பதற்காக., பாதுகாப்பு முறையில் தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துகிறது., கொரோனா பரவல் காரணமாக அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டியை நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. மேலும்., பாதுகாப்பு வசதிகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று அமைச்சர் மூர்த்தி பேசினார்.

Views: - 287

0

0