ஓட்டுநர்களை ஊக்குவிக்க விருது : தமிழக அரசு அறிவிப்பு!!

Author: Udhayakumar Raman
8 September 2021, 9:58 pm
Quick Share

சென்னை: விபத்து இன்றி பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் விதமாக முதலமைச்சர் விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி சட்டப் பேரவையில் போக்குவரத்துத் துறை கொள்கை விளக்கக் குறிப்பு விளக்கப்பட்டது. அதில் ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் பொருட்டு விருத்துகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தின்றி பணிபுரியும் அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்களுக்கு முதலமைச்சரின் விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்துகள் ஏற்படுத்தும் காரணிகளான பேருந்துகளின் பகுதிகள் , சாலை விபத்து ஏற்பட்ட நேரம், சாலை விபத்து அடிக்கடி ஏற்படும் மாதங்கள், சாலையை பயன்படுத்துவோரின் பிரிவுகள் , பாலினம் , வயது, ஓட்டுநர்களின் விபத்து வரலாறு மற்றும் அவர்களது கண் பார்வை பரிசோதனைகள் கண்காணிக்கப்பட்டு தொடர்ந்து ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதன் மூலம் விபத்துகளை குறைத்து இறுதியில் அதனை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என போக்குவரத்து துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 130

0

0