காவலர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி: கோவை மாவட்ட எஸ்.பி. கொடியசைத்து துவக்கி வைத்தார்..!!

Author: Rajesh
29 January 2022, 9:08 am
Quick Share

கோவை: ஈச்சனாரி அருகே நடைபெற்ற மாவட்ட காவலர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை மாவட்ட எஸ்.பி.செல்வநாகரத்தினம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மாநில காவல் துறை இயக்குனர் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் போலீஸ் காவலர்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை மாவட்ட போலீஸ் காவலர்களுக்கான மாரத்தான் போட்டி கோவை ஈச்சனாரி பகுதியில் நடைபெற்றது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இந்த மாரத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். கோவை ஈச்சனாரி பகுதியில் இருந்து மதுக்கரை வரை சுமார் பத்து கிலோமீட்டர் மாரத்தான் நடைபெற்றது.

ஆண் காவலர்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், பெண் காவலர்களுக்கு ஐந்து கிலோமீட்டர் தூரம் என 2 பிரிவுகளாக நடைபெற்றது. இதில் சுமார் 45 பெண் காவலர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர். மாரத்தான் போட்டியை துவக்கி வைத்த மாவட்ட எஸ்பி செல்வரத்தினமும் இந்த மாரத்தான் ஓடினார். முதல் மூன்று இடங்களை பிடித்த காவலர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Views: - 408

0

0