உலக எய்ட்ஸ் தினம் : கோவையில் விழிப்புணர்வு பேரணி துவக்கம்!!

Author: Aarthi Sivakumar
1 December 2021, 1:07 pm
Quick Share

கோவை: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று துவக்கி வைத்தார்.

ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் எய்ட்ஸ் நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளும், இந்த நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சிகளும் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, உலக எய்ட்ஸ் தினமான இன்று கோவையில் எய்ட்ஸ் கட்டுப்பாடு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியையும், கையெழுத்து இயக்கத்தையும் மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.

இதில் கோவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

Views: - 181

0

0