கோவையில் ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வாகன பேரணி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!!

Author: Aarthi Sivakumar
7 September 2021, 1:45 pm
Quick Share

கோவை: தேசிய ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் முதல் வாரம் ‘தேசிய ஊட்டச்சத்து வாரமாக’ கொண்டாடப்பட்டு வருகின்றது. செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை அனுசரிக்கப்படும் இந்த வாரத்தில் மக்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் சார்பில் விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது. இந்த வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து நாட்டுப்புறக் கலைஞர்கள் ஊட்டச்சத்து உணவுகள் குறித்த விழிப்புணர்வு பாடலை பாடி பேரணியை நடத்தினர்.

Views: - 285

0

0