‘அடிச்சு கூட கேப்பாங்க…அப்பகூட OTP-யை கொடுத்துறாதீங்க’: கோவை சிட்டி போலீஸ் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ..!!

Author: Aarthi Sivakumar
29 July 2021, 1:54 pm
Quick Share

கோவை: கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் யாருக்கும் ஓ.டி.பி எண்ணை கொடுக்க வேண்டாம் என்பதை விழிப்புணர்வு வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

சமீபகாலமாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது. இவைகள் பல பெயர்களில் நூதனமாக வாடிக்கையாளர்களின் அக்கவுண்டில் இருந்து களவாடப் படுகிறது. குறிப்பாக இராணுவ அலுவலர்கள்,வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள், வங்கி மேலாளர்கள் என நம்பகமான மக்களின் அடையாளங்களை தவறாக பயன்படுத்தி பணம் பறிக்கப்படுகிறது.

இந்த மோசடியாளர்கள் பாதுகாப்புகள் குறைந்த சமயத்தில் உங்களிடம் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ பணம், பரிசு அல்லது உங்கள் வங்கி / கிரெடிட் கார்டு விவரங்கள் ஆகியவற்றைக் கேட்டு பெறுவார்கள் அல்லது தங்களது வங்கி கணக்கை பெற்று கொண்டு தங்களுக்கு வரும் ஓ.டி.பி-யை வைத்து மோசடியில் ஈடுபடுவார்கள்.

இப்படி மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கோவை மாநகர காவல்துறை விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் யாரிடமும் ஓ.டி.பி-யை கொடுக்காதீர்கள் என அறிவுறுத்தி வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Views: - 188

0

0