ஆழியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு ஆர்ப்பரித்து வரும் தண்ணீர்

6 November 2020, 1:49 pm
Quick Share

கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, ஆனைமலை வட்டம்‌, ஆழியாறு பழைய ஆயக்கட்டு இரண்டாம் போக பாசனத்திற்கு ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர்‌ திறந்துவிடக்‌ கோரி வேளாண்‌ பெருங்குடி மக்கள் வேண்டுகோள் வைத்தனர். அதனை ஏற்று, ஆழியாறு பழைய ஐந்து வாய்க்கால்களின்‌ மூலம்‌ பாசனம்‌ பெறும்‌ நிலங்களின்‌ இரண்டாம் போக பாசனத்திற்கு இன்று 6.11.2020 முதல்‌ 15.4.2021 முடிய 160 நாட்களுக்கு, ஆழியாறு அணையிலிருந்து 1,137 மில்லியன்‌ கன அடிக்கு மிகாமல்‌ தண்ணீர்‌ திறந்துவிடப்பட்டது.

இதனால்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌ ஆனைமலை வட்டத்தில்‌ உள்ள 6,400 ஏக்கர்‌ நிலங்கள்‌ பாசன வசதி பெறும்‌. விவசாயப்‌ பெருமக்கள்‌ நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர்‌ மேலாண்மை மேற்கொண்டு உயர்‌ மகசூல்‌ பெறுவார்கள் என வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தெரிவித்தார். இதில் சார் ஆட்சியர் வைத்தியநாதன், ஒன்றிய செயலாளர்கள் சுந்திரம், அப்புசாமி கார்த்திகேயன், வாசு, செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற்பொறியாளர் லீலா, அணை உதவி செயற்பொறியாளர் மாணிக்கவேல், காடம்பாறை நீர் ஏற்று மின் உற்ப்பத்தி வட்டம் கண்காணிப்பு பொறியாளர் ரஃபிக் அகமது, நவமலை செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 24

0

0

1 thought on “ஆழியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு ஆர்ப்பரித்து வரும் தண்ணீர்

Comments are closed.