புதுக்கோட்டை அருகே தனியார் குவாரிக்கு சொந்தமான கல்குவாரி குளத்தில் குளிக்க சென்ற மூன்று குழந்தை உட்பட தாயென நான்கு பேர் நீரில் மூழ்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் சித்தன்னவாசல் அருகே கூத்தாணிப்பட்டியில் வசித்து வரும் சிவரஞ்சனி மற்றும் அவரது கணவர் பாண்டியன் உள்ளிட்ட நான்கு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், பாண்டியன் விவசாய வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், பாண்டியன் மனைவி சிவரஞ்சனி, கடந்த ஒரு வருடமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்து வருவதாகவும், அடிக்கடி தன்னுடைய மூன்று குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்று விடுவதாகவும் இருந்து வந்திருக்கிறார்.
இந்நிலையில், இன்று காலை 10 மணி அளவில் அன்னவாசல் அருகே தனியாருக்கு சொந்தமான கல்குவாரி குளத்தில் இயற்கை உபாதைகள் செல்வதற்காக தன்னுடைய இரண்டு மகள்கள் மற்றும் நான்கு மாத கைக்குழந்தையை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். பாறை குளத்தில் திடீரென கால் தவறி குளத்தில் உள்ளே விழுந்து விட்டார். அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு விரைந்து வந்து மூழ்கிய நான்கு பேரையும் மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.
தகவல் அறிந்த உடனடியாக வந்த தீயணைப்புத் துறையினர் உதவியுடன் பாறை குளத்தில் மூழ்கிய நான்கு பேரில் சிவரஞ்சனி மற்றும் அவருடைய இரண்டு மகள்களையும் மீட்டு உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், இதில் மூத்த மகள் சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில், தற்பொழுது தாயும் இரண்டாவது மகளும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், நான்கு மாத கைக்குழந்தையை பாறை குளத்தில் தற்போது வரை தீயணைப்புத் துறையினர் பல்வேறு சிரமங்களுக்கிடையே தேடி வருகின்றனர். மேலும், பாறை குளத்தில் தாய் உட்பட மூன்று பேர் மூழ்கிய சம்பவம் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாறை குளத்தைச் சுற்றி நின்று கதறி அழுத காட்சி காண்போரை கண் கலங்க வைத்தது.
மேலும், சிவரஞ்சனனின் உறவினர்களும் இறந்து போன குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதனால், அப்பகுதியை பெரும்சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், சிவரஞ்சனி உட்பட நான்கு பேரும் தடுமாறி குளத்தில் விழுந்தார்களா…? அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து அன்னவாசல் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.