கடவுளாக மாறிய 108 ஆம்புலன்ஸ் பைலட் : சரியான நேரத்தில் பெண்ணுக்கு பிரசவம்… தாயும், சேயும் நலம்!!

Author: Babu Lakshmanan
25 September 2021, 5:08 pm
Kumbakonam ambulance birth - updatenews360
Quick Share

தஞ்சை : கும்பகோணம் அருகே நெய்வாசல் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு 108 ஆம்புலன்சில் அழகான பெண் குழந்தை பிறந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியம் நெய்வாசல் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் (32). இவர் திருப்பூர் தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நிறைமாத கர்ப்பிணியான மாரியம்மாள் என்ற மனைவியும், 5 வயதில் மிருதுளா ஸ்ரீ என்ற பெண் குழந்தையும் உள்ளது. நேற்று அதிகாலை மாரியம்மாளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

அவரது உறவினர்கள், ‘108’ ஆம்புலன்ஸ்க்கு அழைப்பு விடுத்தனர். அங்கு சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பிரசவ வலியால் துடித்த பெண்ணை, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். செல்லும் வழியில் பந்தநல்லூர் அருகே, பிரசவ வலியால் துடித்த மாரியம்மாளுக்கு, ஆம்புலன்ஸ் ‘பைலட்’ அவசர கால மருத்துவ நுட்புனர் ஆகியோர், மருத்துவர் ஆலோசனைப்படி, ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர்.

இறுதியில் மாரியம்மாளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. முதலுதவி சிகிச்சை அளித்து, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், தாயும், சேயும் ஆரோக்கியமாக உள்ளதாக, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்தனர்.

Views: - 130

0

0