காவல்நிலையத்தில் காவலர்கள் நடத்திய வளைகாப்பு : பெண் காவலருக்கு சடங்குகள் செய்து நெகிழ்ச்சி!!

10 November 2020, 1:41 pm
Baby Shower - Updatenews360
Quick Share

மதுரை : பெண் காவல் ஆய்வாளருக்கு காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட  வளைகாப்பு நிகழ்ச்சியில் சக காவலர்கள் சந்தனம் குங்குமம் வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

மதுரை மதிச்சியம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் அமுதவள்ளி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் பெண் உதவி ஆய்வாளர் அமுத வள்ளிக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை அவர் பணிபுரியும் மதிச்சியம் காவல்நிலையத்தில் உள்ள ஆண் பெண் காவலர்கள் இணைந்து கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வளை காப்பு நிகழ்ச்சி மதிச்சியம் காவல் ஆய்வாளர் செல்வி, காவல் துணை ஆணையர் லில்லி கிரேஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. உதவி ஆய்வாளர் அமுதவள்ளி வளைகாப்பு நிகழ்வில் மதிச்சியம் காவலர்கள் மற்றும் அண்ணாநகர், கே.புதூர், தெப்பக்குளம் உள்ளிட்ட காவல்நிலையங்களை சேர்ந்த பெண் காவலர்களும், அமுதவள்ளி குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். கர்ப்பிணி பெண்ணான அமுதவள்ளிக்கு ஆண், பெண் காவலர்கள் சந்தனம் குங்குமம் வைத்து, பூ தூவி வாழ்த்து தெரிவித்தனர்.

காவல்நிலையத்தில் பெண் உதவி ஆய்வாளர்க்கு காவலர்கள் இணைந்து நடத்திய இந்த வளைகாப்பு சம்பவம் பொதுமக்கள் மற்றும் பெண்ணின் குடும்பத்தினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல்நிலையங்கள் என்றால் அச்சப்படும் காலங்கள் மாறி தற்போது காவல்நிலையங்கள் அனைவராலும் மதிக்கப்படும் இடமாக மாறிவருவதற்கு இது போன்ற சம்பவங்கள் சாட்சியாக உள்ளது.

Views: - 21

0

0