சமூக இடைவெளியுடன் பக்ரீத் கொண்டாட்டம்…

1 August 2020, 8:56 am
Quick Share

கோவை: கோவையில் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

இஸ்லாமிய இறைத்தூதர் இப்ராஹீம் அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அதன்படி, பிறை தெரிவதை முன்னிட்டு தமிழகம் உட்பட நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டுள்தை தொடர்ந்து இஸ்லாமிய மக்கள் தங்களது வீடுகளிலேயே சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர்.

கோவையை பொறுத்தவரையில் இஸ்லாமிய மக்கள் அதிகமாக வாழும் உக்கடம், போத்தனூர், சுந்தராபுரம், கோட்டை மேடு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அவரவர் வீடுகளில் இன்று சிறப்பு தொழுகை நடத்தினர்.

வைரஸ் தாக்கத்தால் கூட்டம் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், கோவையில் இஸ்லாமிய மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசங்கள் அணிந்தும் சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் தங்களது பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

Views: - 35

0

0