கொடைக்கானலில் வரும் பிப்ரவரி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை : துணை ஆட்சியர் அறிவிப்பு!!

21 January 2021, 8:27 pm
Plastic - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதுமாகவே இருக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் உட்பட அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு பிப்ரவரி 1 முதல் தடை விதிப்பதாக சார் ஆட்சியர் தெரிவித்தார்.

கொடைக்கானலில் கடந்த வருடம் ஏப்ரல் 1 முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக தடை உத்தரவு தாமதம் ஏற்பட்டது.

உயர்நீதி மன்ற உத்திரவின் பேரில் கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் வணிகர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், பொதுமக்கள் ஆகியோரது முன்னிலையில் நகராட்சி அலுவலகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எடுத்துரைக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கொரோனா காலகட்டத்தில் வாட்டர் பாட்டில்கள் போன்ற பிளாஸ்டிக் பொருள்கள் அனைத்தும் தேக்கம் இருப்பதாகவும் இதற்கு மேலும் சிறிது கால அவகாசம் வேண்டுமெனவும் தெரிவித்தனர்.

ஊட்டியில் எவ்வாறாக பின்பற்றப்படுகிறது என கேட்டறிந்த பிறகு நாளை தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் அனைத்து துறை அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்தியாளர்களை சந்தித்த சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் கொடைக்கானலில் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு பிப்ரவரி 1 முதல் தடை விதிப்பதாகவும், ஏற்கனவே உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்துவதற்கான பணிகள் வரும் பிப்ரவரி 7 தேதி முதல் துவங்கும் எனவும் 4 இடங்களில் வாட்டர் ஏடிஎம்கள் வைக்கப்பட உள்ளது எனவும் மக்கும் குப்பைகளை தரம் பிரிக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Views: - 0

0

0