மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா: கன்னியாகுமரியை சுற்றி பார்க்க தடை…சுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்..!!

Author: Aarthi Sivakumar
1 August 2021, 11:54 am
Quick Share

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் துவங்கிய நிலையில் கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகள் வர போலீஸ் தடை விதித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுஇடங்கள், சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் கட்டுபாடுகள் விதிப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில், கொரானா பாதிப்பு குறைந்து வரும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. மூன்றாவது அலை எச்சரிக்கை காரணமாக பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் விடுமுறை தினமான இன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.

இந்நிலையில் கடற்கரைக்கு செல்லும் இடங்களில் இரண்டு இடத்தில் பேரிகார்டு வைத்து சுற்றுலா வாகனங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்லவும் போலீசார் தடை விதித்துள்ளனர். இந்த தடையால் கன்னியாகுமரி வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Views: - 437

0

0