“வறுமையில் தவித்து வருகிறோம்“ : ஆட்சியரிடம் மனு அளித்த பேண்ட் கலைஞர்கள் உருக்கம்!!
28 September 2020, 11:14 amகோவை : ஊரடங்கு காலத்தில் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் எனவே பாதுகாப்புடன் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோவை மாவட்ட பேண்ட் வாத்திய இசைக் கலைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் பல ஆண்டுகளாக திருமண நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள் மற்றும் அனைத்து மத சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேண்ட் இசைக்கருவிகளை வாசித்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம்.
கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கால் எங்களின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது. இந்த தொழிலை நம்பி இருக்கும் கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பம் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
எனவே எங்கள் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் தகுந்த பாதுகாப்புடன் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கொடுத்து உதவ வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.