போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்த வங்கதேச வாலிபர் கைது : 4 வருடங்கள் சட்டவிரோதமாக தங்கியிருந்தது அம்பலம்!!

17 July 2021, 3:12 pm
Bangladesh Arrrest - Updatenews360
Quick Share

திருப்பூர் : சட்ட விரோதமாக 4 வருடங்களாக திருப்பூரில் தங்கி இருந்த வங்கதேச வாலிபர் கைது செய்யப்பட்டார். 
 
திருப்பூர் பாண்டியன்நகர், பகுதியில் திருமுருகன்பூண்டி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த வாலிபர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் வங்கதேசத்தை சேர்ந்த முகமது சோகில் ரானா (வயது 28) என்பது தெரிய வந்தது. 

மேலும் அவர் எந்த ஆவணமும் இன்றி திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கி இருந்ததும், 4 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இந்தியாவிற்கு வந்ததும் தெரியவந்தது. திருப்பூரில் கடந்த 2 ஆண்டுகளாக தங்கி இருந்து, பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

அவருடன் வேறு யாராவது தங்கி உள்ளார்களா? என்றும், அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்திய போலீசார், முகமது சோகில் ரானாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 380

0

0