திருச்சி பெரிய கடை வீதி அருகே உள்ள கள்ளத்தெருவில் வசித்து வருபவர் துரைராஜ். வங்கியில் அப்ரைசராக பணியாற்றி வரும் இவர் காலையில் பணிக்கு சென்ற நிலையில் இவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார்.
இதையும் படியுங்க: ஊழல் தண்டனையில் இருந்து காப்பாற்ற முடியாது.. இபிஎஸ் போட்ட போடு : துரைமுருகன் ஆவேசம்!
எப்பொழுதும் இரும்பு கதவை பூட்டிவிட்டு சாவியை உள்ளே இருக்கும் மரக் கதவில் உள்ள ஆணியில் சாவியை மாட்டிவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.
இதனை பல நாட்களாக நோட்டமிட்ட இரண்டு இளைஞர்கள் இன்று துரைராஜின் மனைவி கோவிலுக்கு செல்வதை கண்காணித்து வீட்டில் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி கொண்டு வீட்டினை திறந்து உள்ளே சென்றுள்ளனர்.
அப்போது முதல் மாடியில் இருந்த துரைராஜ் மகன் வசந்த் எதேர்ச்சியாக கீழே வந்துள்ளார் அப்போது இரண்டு பேர் வீட்டில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் சத்தம் போட்டு உள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட அந்த திருடர்கள் சுமார் நான்கரை லட்சம் ரொக்கம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு தப்பிக்க முயற்சித்துள்ளனர்.
மிகவும் குறுகிய சந்து என்பதால் வசந்தின் கையில் பிளேடால் கிழித்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றனர். அப்போது கையில் இந்த நகைகளை வசந்த் பிடுங்கி உள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டை காவல்துறையினர் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி சுமார் 4.20 லட்சம் ரொக்க பணத்துடன் தப்பிச்சென்ற இரண்டு இளைஞர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
திருச்சி மாநகர மையப்பகுதியில் பட்டப் பகலில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.