155 அடி மலை உச்சியில் இருந்து கண்ணை கட்டிக் கீழே இறங்கிய வங்கி அதிகாரி : குவியும் பாராட்டு!!

30 January 2021, 6:23 pm
bank officer - Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : மண்ணிவாக்கம் அருகே உள்ள மலையில் ஏறி கண்ணைக் கட்டிக்கொண்டு 155 அடி உயரத்தில் இருந்து கீழே இறங்கி சாதனை புரிந்த வங்கி அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியை சார்ந்தவர் எஸ்.வி.ரமணா. இவர் தனியார் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

தாய் நாட்டிற்காக சேவை ஆற்றி வரும் ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் ,இளைஞர்கள் அதிக அளவு ராணுவத்தில் சேர முன்வர வேண்டும் என்கின்ற கோரிக்கையை வலியுறுத்தியும் எஸ்.வி.ரமணா அவர்கள் மணிமங்கலம் அருகே உள்ள மலைப்பட்டு கிராமத்தில் உள்ள மலைக் குன்றில் ஏறி சுமார் 155 அடி உயரத்தில் இருந்து தன் கண்களை கட்டிக் கொண்டு மேலிருந்து கீழே இறங்கி சாகசம் மேற்கொண்டார் .

இவருடைய சாதனைக்கான சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியில் குவிந்தனர். இவருடைய சாகசத்தை பார்த்து அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

சுற்றுச்சூழலை மிகவும் தூய்மையாக வைக்க வேண்டும் என்றும், தன்னுடைய சாகசத்தை இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணிப்பதாகவும் எஸ்‌வி.ரமணனா தெரிவித்தார்.

Views: - 3

0

0