நடுக்கடலில் துணிவு படத்திற்காக பேனர் : சத்தமே இல்லாமல் அசத்திய அஜித் ரசிகர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 January 2023, 1:43 pm
Thunivu Banner - Updatenews360
Quick Share

பொங்கல் தினத்தன்று அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த துணிவு திரைப்படமும், இளைய தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் நாடு முழுவதும் வெளியாக உள்ளது,

இதனை ஒட்டி திரைப்படங்கள் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து புதுச்சேரியில் விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் போட்டி போட்டுக் கொண்டு வித விதமான ஸ்டில்களில் பேனர்களை வைத்து அசத்தி வருகின்றனர்.

இந்த பேனர்களில் விஜய் மற்றும் அஜித் பேசும் பஞ்ச் வசனங்களும் இடம் பெற்று பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது…

புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் விதவிதமான கெட்டப்புகளில் அஜித்துக்கு பேனர் வைத்திருந்தாலும் இதனையும் தாண்டி புதுச்சேரி சோலை நகர் வடக்கு பகுதியில் அஜித் நடித்துள்ள துணிவு படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து அஜித் ஃபேன்ஸ் என்ற பெயரில் 410 அடியில் 96 கெட்டப்புகளில் பேனர் வைத்து அசத்தியுள்ளனர்.

தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களும் அஜித் ரசிகர் மன்ற சார்பில் வழங்கப்பட்டது.

மேலும் காந்தி சிலை அருகே நடுக்கடலில் அஜித் நடித்த துணிவு படத்திற்கு வாழ்த்து தெரிவித்து அஜித்தின் பேனர்கள் கடல் நடுக்கடலில் கட்டப்பட்டுள்ளது.இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும் நகரம் முழுவதும் விதவிதமாகவும் வித்தியாசமாகவும் அஜித் – நடித்துள்ள திரைப்படங்களின் கெட்டப்புகளை தத்ரூபமாக பேனரில் பொறிக்கப்பட்டு இந்த பேனர்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 1022

1

0