100 சதவீத பணியாளர்களுடன் இயங்கியது பனியன் நிறுவனங்கள்! திருப்தியான திருப்பூர்!!

1 September 2020, 2:39 pm
Tirupur Baniyan- Updatenews360
Quick Share

திருப்பூர் : தமிழக அரசு ஊரடங்கு தளர்வினை தொடர்ந்து திருப்பூரில் அனைத்து பனியன் நிறுவனங்களும் நூறு சதவீத தொழிலாளர்களுடன் இயங்க ஆரம்பித்தன.

கொரோனா நோய் பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியது. இதனால் அனைத்து பனியன் நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. இந்நிலையில் தமிழக அரசு ஊரடங்கினை சில விதிமுறைகளுடன் தளர்வினை ஏற்படுத்தியதன் அடிப்படையில், கடந்த மே மாதத்தில் ஐம்பது சதவீத தொழிலாளர்களுடன் தமிழக அரசின் வழிகாட்டுதல் விதிமுறையின் படி, முக கவசம், கிருமிநாசினி, தனிமனித இடைவெளி ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் பனியன் நிறுவனங்கள் இயங்க ஆரம்பித்தன.

இந்நிலையில் கடந்த ஞாயிறன்று தமிழக அரசு ஊரடங்கில் மேலும் சில விதிமுறை தளர்வுகளை அமல்படுத்தியது. இதன்படி தமிழக அரசின் வழிகாட்டுதல் விதிமுறைகளின்படி தொழிற்சாலைகள் நூறு சதவீத பணியாளர்களுடன் இன்று முதல் இயங்கலாம் என அறிவித்தது.

இதனை தொடர்ந்து திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் தமிழக அரசின் வழிகாட்டுதல் விதிமுறைகளின் படி நூறு சதவீத தொழிலாளர்களுடன் இன்று முதல் இயங்க ஆரம்பித்தன. நூறு சதவீத தொழிலாளரகளுடன் பனியன் நிறுவனங்கள் இயங்க ஆரம்பித்த காரணத்தால் உற்பத்தி பெருக்கம் ஏற்பட்டு தொழில் வளர்ச்சி அடையும் என பனியன் நிறுவனத்தினர் நம்பிக்கை தெரிவிதரதுள்ளனர்.

Views: - 6

0

0