பொய் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பர்கூர் சட்டமன்ற உறுப்பினர்

29 September 2020, 11:33 pm
Quick Share

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சி.வி.ராஜேந்திரன். இவர் கடந்த 3-நாட்களுக்கு முன்பு கொரானா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு,சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்புமர்ம நபர்களால் இவரைப் பற்றி தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது.

இதனால் இவரது குடும்பம் மற்றும் உறவினர்கள் மற்றும் பர்கூர் சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் அதிமுகவினர் ஆகியோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதை அடுத்து நோய் தொற்றிலிருந்து 90-சதவிதம்குணமடைந்துவருவதாகவும் தன்னைப்பற்றி தவறான கருத்துக்களை பரப்பும் வலைதள செய்திகளை நம்பாதீர்கள் எனவும் கூறியுள்ளார்.

இதனால் பர்கூர் சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் அதிமுகவினர் மற்றும் உறவினர்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். தன்னைப்பற்றி தவறான கருத்துகளை பரப்பும் வலை தளங்களுக்கு பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சி. வி ராஜேந்திரன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Views: - 10

0

0