பர்கூர் எம்.எல்.ஏ. கொரோனாவுக்கு பலி என உலா வரும் வதந்தியான செய்திகள்..!
26 September 2020, 9:43 amQuick Share
கிருஷ்ணகிரி : பர்கூர் அ.தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கொரோனாவால் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தியான செய்திகள் உலா வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அ.தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பர்கூர் அ.தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கொரோனாவால் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தியான செய்திகள் உலா வருகிறது.