பரோட்டா சாப்பிட்டவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் : கள்ளக்குறிச்சி அருகே சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 September 2021, 7:24 pm
Parotta Man Dead -Updatenews360
Quick Share

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில், பரோட்டா சாப்பிட்டவர் மாரடைப்பில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் எதிரே, பரோட்டா சாப்பிட்டு கொண்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் பவித்திரம் கிராமத்தை சேர்ந்த சடகோபன் என்பவரது மகன் தாமோதரன் (வயது 45) என்பவர் இன்று தனது சொந்த வேலையாக திருக்கோவிலூர் பகுதிக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் எதிரே பேருந்து நிறுத்தும் இடத்தில் அமர்ந்து சாப்பிட்டுள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து இறந்துள்ளார்.
இதனையடுத்து அவரது உடலை மீட்டு திருக்கோவிலூர் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 179

0

0