50 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

24 September 2020, 1:31 pm
Minister SP Velumani - updatenews360
Quick Share

கோவை : கோவையில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார்கள், மற்றும் செவித்திறன் கருவிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 50 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ஒரு லட்சம் மதிப்பிலான பேட்டரி கார், முதுகுத்தண்டுவட பாதிப்புக்குள்ளான ஒருவருக்கு ரூ.4500 மதிப்பள்ள ‘வாட்டர் பெட்’, செவித்திறன் குறைபாடுள்ள நால்வருக்கு செவித்திறன் கருவிகள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன், மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் பெரியய்யா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.