போலீஸ் பேரு கெட்டுப்போச்சு… புகார் கொடுப்பவர்களிடம் கனிவா நடந்துக்கோங்க : LEFT, RIGHT வாங்கிய டிஜிபி சைலேந்திரபாபு!!

Author: Udayachandran RadhaKrishnan
10 September 2022, 1:57 pm
DGp - Updatenews360
Quick Share

புகார் கொடுக்க வருபவர்களிடம் போலீஸ் நிலையங்களில் இருப்பவர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, புகார் கொடுக்க வருபவர்களிடம் போலீஸ் நிலையங்களில் இருப்பவர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.

புகார்தாரர்களிடம் சரியான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும். சில போலீஸ் அதிகாரிகள் எதிர்மறையான சிந்தனையுடன் உள்ளனர். புகார்தாரர்கள் சில நேரங்களில் உயர் அதிகாரிகளை அணுகி இருந்தால் அதனை அவர்களிடம் சுட்டிக்காட்டி பேசக்கூடாது.

புகார்தாரர்களிடம் துன்புறுத்தும் வகையில் செயல்படுவது போலீஸ் துறை மீதான நன்மதிப்பை குறைக்கும் என்பதை உணர வேண்டும். போலீஸ் துறைக்கான அதிகாரம் என்பது பொறுப்பு என்பதை அதிகாரிகள் உணர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 132

0

0