எனக்கும் போர் அடிக்கும்ல : மரத்தின் பின் HIDE & SEEK விளையாடிய கரடி : வீடியோ எடுத்தவர்களை விரட்டிய காட்சி!!

By: Udayachandran
31 July 2021, 5:58 pm
Bear Attack - Updatenews360
Quick Share

நீலகிரி : உதகையில் இருந்து முதுமலை செல்லும் சாலையில் மரத்தில் முதுகை சொரிந்து ஆனந்தமாக இருந்த கரடியின் வீடியோ வைரலாகி வருகிறது.

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு செல்லும் சாலையில் பகல் நேரங்களில் மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் அதிகமாக வனவிலங்குகள் நடமாட்டம் இருந்து வருகிறது.

பெரும்பாலும் கரடிகள் நடமாட்டம் பகல் நேரங்களில் காண்பது மிகவும் அரிதான ஒன்று. இந்நிலையில் முதுமலை சாலையில் வாகன ஓட்டிகள் செல்லும் பொழுது சாலையின் ஓரத்தில் கரடி மரத்தில் தனது முதுகை ஆனந்தமாக சொரிந்து நின்ற காட்சி கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

சாலை வழியே சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் ஆனந்தமாய் கரடியை படம் பிடித்தனர். அப்போது வாகனத்தை நோக்கி கரடி ஓடி வந்தது. உடனடியாக ஓட்டுனர் வாகனத்தை பின் நோக்கி எடுத்துச் சென்றார்.

பின்னர் சிறிது நேரம் மரத்தில் தன் முதுகைச் சொறிந்த கரடி பின்பு வனப்பகுதிக்குள் சென்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Views: - 109

0

0