கரூர் அரசு மருத்துவமனையில் நிரம்பிய படுக்கைகள் : உயிரிழப்புகளும் அதிகரித்த அதிர்ச்சி!!

12 May 2021, 8:21 pm
Karur GH - Updatenews360
Quick Share

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுக்கை வசதிகள் நிரம்பியதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் கனிசமாக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கரூரை அடுத்த காந்தி கிராமம் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கொரனோ 2வது அலை பரவி வரும் இந்த சூழ்நிலையில் நாள் ஒன்றுக்கு சுமார் 250 க்கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கொரோனோ பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். மீதமுள்ளோர் பழைய அரசு மருத்துவமனை வளாகம், அரசு கலைக் கல்லூரி, புலியூர் தனியார் பொறியியல் கல்லூரி வளாகம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 150 சாதாரண படுக்கை வசதி, 250 ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி, 50 தீவிர சிகிச்சை பிரிவுடன் கொரனோவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெரும்பாலான படுக்கைகள் நிரம்பி விட்டதாக கூறப்படும் நிலையில் மருத்துவர்களும், செவிலியர்களும் சிகிச்சை அளிக்க திணறி வருவதாக கூறப்படுகிறது. இதில் பலரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

கடந்த 3 தினங்களாக 15, 18, 20 என உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், இதில் கொரனோவால் உயிரிழப்பு 6 என கணக்கு காட்டப்படுகிறது. மற்றவர்கள் நெஞ்சு வலி ஏற்பட்டும், நுரையீரல் தொற்று ஏற்பட்டதாக மருத்துமனை நிர்வாகம் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
பிணவறையில் சடலங்கள் வைக்க தொடர்ந்து எடுத்துச் செல்லும் நிலை உள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டுமல்லாமல் வெளி மருத்துவமனைகளில் உயிரிழப்பவர்களின் உடல்கள் இங்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து வரப்படுகிறது.

அவற்றை பிணவறையின் உள்ளே வைக்க இடம் இல்லை என்பதை காரணம் காட்டி ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் சேமிப்பு டேங்க் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் இருப்பு குறைய, குறைய தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக ஆக்ஸிஜன் சேகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், 142 சிலிண்டர் கேஸ் ஆக்ஸிஜன் கையிருப்பு இருப்பதாக மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொள்ள முயன்ற போது அலைபேசியை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Views: - 58

0

0