‘கவர்ச்சி நடிகை‘ என்பதால்தான் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பு : கோபமாக பேசிய கோபண்ணா!!

Author: Udayachandran
12 October 2020, 1:20 pm
Kushboo Gopanna - Updatenews360
Quick Share

காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த குஷ்பு, கடந்த சில நாட்களாக பாஜகவிற்கு ஆதரவாக பேசி வந்ததாக காங்கிரஸ் கட்சியின் ஊடக பொறுப்பாளர் கோபண்ணா தெரிவித்துள்ளார். குறிப்பாக அமித்ஷாவுக்கு வாழ்த்து, பிரதமர் மோடிக்கு வரவேற்பு, அதிமுக முதல்வர் வேட்பாளர் தேர்வுக்கு வாழ்த்து என அவரின் நடவடிக்கை மாறியது.

முதலில் பாஜகவை கடுமையாக பேசிக் கொண்டிருந்த குஷ்பு, கடந்த சில நாட்களாக அவரின் செயல்கள் மாற்றமடைந்தது. கட்சியில் தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பை ஆரம்பத்தில் சிறப்பாக செய்து வந்த அவர் காங்கிரசின் கொள்கையை எடுத்து சொல்வதிலும், பாஜக மீது கடுமையான விமர்சனத்தையும் வைத்து வந்தார்.

குஷ்பு காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்காக எதுவும் செய்ததில்லை. காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தால் ஏதாவது பேசுவார். கவர்ச்சி மிக்க நடிகையாகவே கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், கவர்ச்சி மிக்க நட்சத்திரம் என்பதால், மக்களுக்கு அதிகம் தெரிந்தவர் என்பதால் அவரை செய்தி தொடர்பாளராக நியமித்தோம் என தெரிவித்தார்.

Junior Vikatan - 19 February 2020 - “கெஜ்ரிவாலிடம் பாடம் கற்றுக்கொள்ள  வேண்டும் காங்கிரஸ்!'' | TN Congress senior leader Gopanna interview

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் ஈடுபாடுகளை குறைத்துக்கொண்ட அவர், திரைப்பட சம்மந்தமான பணிகள் இருப்பதால் கட்சி நிகழ்ச்சிக்கு வருவதில்லை, அவரை அழைத்தாலும் வெளிநாட்டில் உள்ளதாகவும் படப்பிடிப்பில் உள்ளதாகவும் கூறுவார். ஏதோ ஒருத வகையில் காங்கிரஸ் மீது ஈடுபாடு அவருக்கு குறைந்துள்ளது.

ஆனால் அவரின் கட்சி மாற்றத்திற்கு காரணம் குஷ்புவின் கணவர் சுந்தர் சி நிர்ப்பந்தம் என நினைப்பதாக கோபண்ணா கூறியுள்ளார். இந்த முறை பாஜகவில் சேருவதற்கும், அதிமுகவில் நல்ல உறவை ஏற்படுத்துவதற்கும் அவரின் ஆலோசனைப்படியே குஷ்பு இந்த முடிவை எடுத்திருப்பதாக கருதுகிறேன் என கூறினார்.

Khushbu gets nostalgic about her husband Sundar.C's love proposal

நிச்சயமாக குஷ்பு இதை மனதார செய்திருக்க மாட்டார், அவர் கணவரின் நிர்பந்ததிற்கு ஆளாகியிருப்பார் என்று தான் நினைக்கிறேன். காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்காக அவர் எதுவும் செய்யவில்லை, அதனால் அவரின் பதவி பறிக்கப்பட்டரை வரவேற்கிறேன் என காங்கிரஸ் கட்சியின் ஊடக பொறுப்பாளர் கோபண்ணா தெரிவித்துள்ளார்.

Views: - 50

0

0