காதலர் தினம் – நாய்களுக்கு திருமணம் செய்து எதிர்ப்பு..! (வீடியோ)

14 February 2020, 4:06 pm
Quick Share

கோவை :கோவையில் ஜெர்மன் ஷெப்பர்டுக்கும் போமெரியன் நாய்க்கும் பாரத் சேனா அமைப்பினர் திருமணம் நடத்தி வைத்து காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பாரத் சேனா சார்பில் ஜெர்மன் ஷெப்பர்டுக்கும் போமெரியன் நாய்க்கும் திருமணம் செய்யப்பட்டது.

நாய்களுக்கு தலையில் பூக்களை வைத்து, பாரத் சேனா அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் சிலர் தங்கள் கைகளில் தாலியை பிடித்து கொண்டு நின்றனர்.

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இளைஞர்கள் செய்த இந்த செயல் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.