கல்வி கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் : பாரதியார் பல்கலை.,யில் பரபரப்பு!!

Author: Udayachandran
8 October 2020, 4:05 pm
bharathiyar unviersity - Updatenews360
Quick Share

கோவை : பாரதியார் பல்கலைக்கழகத்தில் கல்வி கட்டண உயர்வை கண்டித்து ஆராய்ச்சி மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் உள்ளே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் 2020 ஆம் ஆண்டிற்கான பிஎச்டி பயிலும் ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வுச்சுருக்கம் , ஆய்வு சமர்ப்பித்தல் போன்ற கட்டணங்கள் கடந்த ஆண்டைவிட 120 சதவீதம் அதிகமாக அதிகரித்துள்ளதாக கூறி சுமார் 15-க்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்கள் அதிக இரத்தம் உள்ளே பதாகைகள் ஏந்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இதில் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் மாணவர்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.‌மாணவர்களின் கோரிக்கையை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறியதை தொடர்ந்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.

Views: - 57

0

0