பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

Author: Babu
24 July 2021, 4:03 pm
bhavani Water Stop -Updatenews360
Quick Share

ஈரோடு : தொடர் மழையின் காரணமாக பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான அணைகளின் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக பவானிசாகர் அணையும் நிரம்பி வருகிறது.

தற்போது, பவானிசாகர்‌ அணையின்‌ நீர்மட்டம்‌ இன்று காலை 99.06 அடியை எட்டியுள்ளது. அடுத்த 12 மணிநேரத்திற்குள்‌ அணையின்‌ நீர்மட்டம்‌ 100 அடியை எட்டும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. அணையின்‌ நீர்மட்டம்‌ 100.00 அடியை எட்டியவுடன்‌ அணைக்கு வரும்‌ நீர்வரத்தினை பொருத்து வெள்ள நீர்‌ பவானி ஆற்றில்‌ திறந்துவிடப்படும்‌ என தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.

எனவே பவானி ஆற்றின்‌ கரையோரம்‌ மற்றும்‌ தாழ்வான பகுதிகளில்‌ வசிக்கும்‌ பொதுமக்களுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை அறிவிப்பினை தெரிவிக்குமாறு வருவாய்த்துறையினர்‌ மற்றும்‌ காவல்‌ துறையினர்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

Views: - 265

0

0