இந்தி பட வாய்ப்பு வந்தால் டி-சர்ட்டை கழட்டிவிடுவார்கள் : யுவன், ஐஸ்வர்யா ராஜேஷை விளாசிய காமெடி நடிகை..!

9 September 2020, 6:19 pm
yuvan1 - updatenews360
Quick Share

தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கைக்கு அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் இருமொழிக் கொள்கை என்பதே தங்களின் நிலைப்பாடு என்றும், மும்மொழிக் கொள்கை முடிவை வாபஸ் பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.

இருப்பினும், தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு என்னும் போராட்டத்தை சமூகவலைதளங்கள் வாயிலாக மேற்கொண்டு வந்த தி.மு.க., தற்போது சினிமா பிரபலங்களை ‘இந்தி தெரியாது போடா’ என்னும் வாசகம் அடங்கிய டி-சர்ட் அணியச் செய்து முன்னெடுத்து வருகிறது. யுவன் சங்கர் ராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிரிஷ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் இந்திக்கு எதிராக டி-சர்ட்களை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்திருந்தனர்.

இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட இந்தி தெரிந்த பிரபலங்களும் இந்த டி-சர்ட்டை அணிந்தது பெரும் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறது.

இதனிடையே, இந்தியை கற்பது அவரவர் விருப்பம் என தி.மு.க.வினருக்கும், எதிர்க்கும் பிரபலங்களுக்கும் தனது டுவிட்டர் மூலம் நகைச்சுவை நடிகை ஆர்த்தி பதிலளித்து வருகிறார். “இந்திய மொழிகளில் ஒன்று இந்தி அது வேண்டானு எதிர்பீங்க ஆனா எங்கேயோ இருந்து வந்து நம்மை அடிமை படுத்தியிருந்த ஆங்கிலத்தை அரவனைப்பீங்க,” என தி.மு.க.வினருக்கு எதிராக வெளிப்படையாக கேள்விக் கனைகளை தொடுத்து வருகிறார்.

aarthi - updatenews360

இந்த நிலையில், சினிமா பிரபலங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நடிகை ஆர்த்தி தற்போது பதில் டுவிட் ஒன்று போட்டுள்ளார். அதில், “நம்ம தமிழ் -தாய் மாதிரி நமக்கு உயிர்மூச்சு. பிறருக்கு அவங்க மொழி அப்படிதான்… ஆதி மொழி தமிழிலிருந்து தான் எல்லா மொழியும் பிறந்திருக்கு.. அதனால பழிப்பது தவறு விரும்பினால் படிப்போம்… இந்தி பட வாய்ப்பு வந்தால் t. Shirtயை கழட்டிவிடுவார்கள் பிரபலங்கள் ஜாக்கிரதை,” எனக் கூறி பதிவிட்டுள்ளார்.

இவரது கருத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், சிலர் ஆர்த்தியின் பதிவிற்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

Views: - 8

0

0