பிக்பாஸ் 7 : இந்த வாரம் வெளியேறப் போவது இவரா? காத்திருக்கும் பெற்றோர்.. காதலுக்கு பச்சைக்கொடி?!
பிக்பாஸ் சீசன் 7 தற்போது வேறலெவலில் போய்க்கொண்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே இரண்டூ வீடுகள்தான். இதில் முக்கியமான ஜோடியாக இருப்பது மாயா பூர்ணிமா. இவர்கள் செய்யும் அட்ராசிட்டிஸ்களுக்கு அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் பூர்ணிமா மாயா இல்லாமல் தனியாக விளையாடினால் சிறப்பாக இருக்கும் என்றும் பலர் கருத்து கூறி வந்தனர். அதோடு பூர்ணிமா சில வாரங்களுக்கு முன்பு எலிமினேஷனில் இருந்த நேரத்தில் அந்த வாரத்தில் கண்டிப்பாக வெளியேறுவார் என்றும் ரசிகர்கள் உறுதியாக இருந்தனர். ஆனால் அந்த வாரத்தில் எலிமினேஷன் கேன்சல் செய்யப்பட்டது. இது பூர்ணிமாவுக்கு சூப்பர் ஆப்பராக அமைந்து இருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் சில வாரங்களாக பூர்ணிமாவின் விளையாட்டு மாற்றம் பெறுகிறது என்று பல ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதோடு பூர்ணிமாவின் கேரக்டர் இப்போது ரசிகர்களுக்கு பிடிக்கத் தொடங்கி இருக்கும் நிலையில் பூர்ணிமா மாயாவிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி விஷ்ணு கேங்கோடு சேர்ந்து கொண்டிருக்கிறார். இதனால் விஷ்ணுவை பூர்ணிமா காதலிக்கிறாரா என்ற கேள்விகள் ரசிகர்களின் மத்தியில் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் பூர்ணிமாவின் பெற்றோர் பேட்டி ஒன்றில் பூர்ணிமாவை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அவர்களிடம் பூர்ணிமாவிற்க்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அதை நீங்கள் என்ன நினைக்கிறீங்க என்று கேள்வி அதற்கு பூர்ணிமாவின் அப்பா அதை நாம எப்படி சொல்ல முடியும். பூர்ணமா மனதிற்குள் என்ன இருக்கிறது என்பதை பூர்ணிமா சொன்னாதான் நமக்கு தெரிய வரும். பூர்ணிமா எப்படியும் இன்னும் கொஞ்ச நாளில் வெளியே வந்து விடுவார். ஏனென்றால் இன்னும் கிட்டத்தட்ட 23 நாட்கள் தான் இருக்கிறது. அதற்குப் பிறகு பூர்ணிமாவே இது பற்றி பேசட்டும். பூர்ணிமா மனசில் உண்மையில் என்ன இருந்தாலும் எங்களுக்கு ஓகே தான் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.