கொடைக்கானலில் சுற்றுலா பயணியின் உயிரை பறித்த பைக் ரேஸ் : கடும் கட்டுப்பாடுகளை விதிக்க கோரிக்கை!!

Author: Udayachandran
31 July 2021, 2:20 pm
Bike Race - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கானலில் தொடரும் பைக் ரேஸால் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில் ஏரி சாலையை சுற்றி பலத்த கட்டுப்பாடு விதிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலக சுற்றுலா தலமான கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். கடந்த சில வருடங்களாகவே கொடைக்கானலுக்கு இருசக்கர வாகனங்களில் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் ஏரியை சுற்றி தங்களுடைய இரு சக்கர வாகனங்களில் ரேஸ்கள் நடத்துவதும் தொடர்ந்து சாகசங்கள் செய்து வருவதால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று கொடைக்கானல் ஏரி சாலையில் இருசக்கர வாகனம் மோதி சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏரி சாலையைச் சுற்றி வாகனங்கள் வருவதை காவல்துறையினர் கடுமையாக கட்டுப்படுத்தி பல கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Views: - 153

0

0