யானைகளை வம்புக்கு இழுத்த வாகன ஓட்டிகள்… ஆபத்தை உணராமல் செய்த அலப்பறை : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
8 February 2023, 5:54 pm
Quick Share

நீலகிரி : ஆபத்தை உணராமல் யானை கூட்டங்களை வாகன ஓட்டிகள் சீண்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலை மாவட்டம் ஆன நீலகிரி மாவட்டம் சுமார் 60 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் காட்டு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதிகளிலிருந்து சாலையோரங்களிலும், குடியிருப்பு பகுதிகளுக்கும் வன விலங்குகள் வருவது வாடிக்கையாகிவிட்டது. இதனால், அவ்வப்போது வனவிலங்கு மனிதர்களிடையே மோதல் ஏற்பட்டு மனித உயிர்கள் பலியாகி வருவது தொடர்கதையாக உள்ளது.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர், கெத்தை முள்ளி, காரமடை மார்க்கமாக செல்லக்கூடிய சாலை அடர்ந்த வனப்பகுதி ஒட்டியுள்ள சாலையாகும். இச்சாலையில் அடிக்கடி வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள நிலையில், காரமடை வழியில் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் மஞ்சூரில் இருந்து காரமடை செல்லும் சுற்றுலா பயணிகள், மிக கவனத்துடன் செல்ல வேண்டிய இச்சாலையில், ஒரு சிலர் இன்று கெத்தை மாரியம்மன் கோயில் அருகே 5 காட்டு யானைகள் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தது.

அப்போது அவ்வழியாக வந்த பைக் மற்றும் கார்களை வைத்துக்கொண்டு ஆபத்தை உணராமல் காட்டு யானைகளுடன் விளையாடியுள்ளனர். காரை பின்நோக்கி செலுத்திய படி புகைப்படம் எடுத்து கொண்டு, மீண்டும் முன்னோக்கி கார் வரும் போது, கூட்டத்தில் இருந்த யானை ஒன்று காரை தாக்கும் விதமாக வருவது பார்ப்போரை அச்சத்தில் ஆழ்த்துகிறது.

காட்டு யானை கூட்டத்துடன் வாகன ஓட்டிகள் மற்றும் உள்ளூர் வாசிகள், விளையாடும் சம்பவம் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. எனவே, வனத்துறையினர் இச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Views: - 432

0

1