மதுரை அருகே 80 ஆடுகள் பலியிட்டு நடத்தப்பட்ட திருவிழா…!

1 November 2020, 10:35 am
nov kidavettu - updatenews360
Quick Share

திருமங்கலம் அருகே கோவிலில் 80 ஆடுகள் மற்றும் 60 கோழிகளை பலியிட்டு பிரியாணி திருவிழா விமர்சையாக நடத்தப்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.அம்மாபட்டி கிராமத்தில் சடச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

இங்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் திருவிழாவில், 20 சமுதாயத்தை சேர்ந்த மக்கள் ஒன்றுகூடி கிடாய்களை பலியிட்டு அம்மனுக்கு விருந்து படைத்து வழிபாடுவது வழக்கம்.

இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாக பொங்கல் வைக்கப்படுவது தடை செய்யப்பட்டு, எளிமையாக விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 80 ஆடுகள், 60 கோழிகள் அம்மனுக்கு படையலிடப்பட்டது.

இதனையடுத்து, 1500 கிலோ அரிசியுடன் பிரியாணி தயாரிக்கப்பட்டு, வீடுகளுக்கே நேரடியாக சென்று கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.

Views: - 25

0

0