TAVERA கார்களை மட்டும் குறி வைக்கும் விநோத திருடன் : கார், ₹14 லட்சம் ரொக்கத்துடன் போலீசாரிடம் சிக்கினான்!!

12 July 2021, 8:13 pm
Tavera Theft - Updatenews360
Quick Share

திருப்பூர் : எரிசாராயம், செம்மரங்களை கடத்த செவர்லட் டவேரா கார்களை மட்டும் திருடிய திருடனை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் – சூசையாபுரம் பகுதியில், வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த செவர்லட் டவேரா கார் திருடப்பட்டது குறித்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த புகாரின் அடிப்படையில், தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், குளித்தலை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் காரை திருடிச் சென்றது தெரியவந்தது . இதனை தொடர்ந்து சுரேசை போலீசார் கைது செய்தனர். மேலும் குற்றவாளியிடமிருந்து 14 லட்ச ரூபாய் பணம், 5 செல்போன், செவர்லட் உள்ளிட்ட இரண்டு கார்கள், ஒரு பொலீரோ சரக்குவாகனம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர் .

மேலும் குளித்தலை சுரேஷ் மீது தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு , செம்மரக்கடத்தல் , எரி சாராயம் கடத்தல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டவழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் சுரேஷ் எரிசாராயம், செம்மரங்களை கடத்த செவர்லட் டவேரா கார்களை மட்டும் அதிகளவில் திருடியது தெரிய வந்தது.

Views: - 272

1

0