சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை: கைமாறு செய்யுமா கேரள அரசு..?

Author: kavin kumar
28 October 2021, 8:59 pm
Quick Share

கோவை: கேரளா முதல்வருடன்‌ பேசி சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயரத்த முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌ நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என கோவை தெற்கு சட்டப்பேரவைத்‌ தொகுதி உறுப்பினர்‌ வானதி சீனிவாசன்‌ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோவையின்‌ முக்கிய நீராதாரமான சிறுவாணி அணை, மேற்கு தொடர்ச்சி மலையில்‌ கேரள மாநில பகுதியில்‌ அமைந்துள்ளது. அணையில்‌ இருத்து பெறப்படும்‌ குடிநீர்‌ சாடிவயல்‌ சுத்திகரிப்பு நிலையத்தில்‌ சுத்திகரிக்கப்பட்டு கோவை மாநகரின்‌ ஒரு பகுதிக்கும்‌ 7 பேரூராட்சிகள்‌, 28 வழியோர கிராமங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. சிறுவாணி அணையின்‌ முழு கொள்ளளவு 49.59 அடி. ஆனால்‌ கேரள அரசன்‌ உத்தரவால்‌ பல ஆண்டுகளாக 45 அடி உயரம்‌ வரை மட்டுமே தண்ணீர்‌ தேக்கப்படுகிறது. 45 அடிக்கு மேல்‌ தண்ணீர்‌ தேங்குவதைத்‌ தடுக்க கேரள அரசு அடிக்கடி அணையிலிருந்து தண்ணீரை வெளியேற்றி விடுவார்கள்‌. சிறுவாணி அணையில்‌ 45 அடிக்கும்‌ மேல்‌ தண்ணீர்‌ தேக்க வேண்டும்‌ என்று கோவை மாவட்ட ஆட்டியரும்‌, தமிழக அரசின்‌ பொதுப்பணித்‌ துறை, நகராட்சி நிர்வாகம்‌, குடிநீர்‌ வழங்கல்‌ துறை அதிகாரிகள்‌ எத்தனை முறை கோரிக்கை விடுத்தாலும்‌ கடிதம்‌ எழுதினாலும்‌ கேரளம்‌ அதனை கண்டுகொள்வதில்லை.

கோவை மாநகர்‌ மற்றும்‌ மாவட்ட மக்களின்‌ குடிநீர்‌ தேவையைக்‌ கருத்தில்‌ கொண்டு சிறுவாணி அணையின்‌ நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும்‌ என்று எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக பல்வேறு போராட்டங்களை நடத்தியது. தற்போதுள்ள சிறுவாணி அணைக்கு வரும்‌ தண்ணீரைத்‌ தடுக்கும்‌ வகையில்‌ சிறுவாணி ஆற்றின்‌ குறுக்கே புதிய அணை கட்ட கேரளம்‌ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கேரள அரசின்‌ இந்த முயற்சியைக்‌ கண்டித்து கடந்த 2016 ம்‌ ஆண்டு செப்டம்பர்‌ 3ம்‌ தேதி கோவையில்‌ அன்றைய திமுக பொருளாளர்‌ மு.க.ஸ்டாலின்‌ தலைமையில்‌ ஆர்ப்பாட்டம்‌ நடைபெற்றது. “தூங்கும்‌ தமிழக அரசை தட்டியெழுப்பும்‌ போராட்டம்‌ இது. கேரள அரதே, மத்திய அரசே எங்களிடம்‌ மோதாதே. தமிழர்களிடம்‌ மோதாதே, எங்கள்‌ உரிமையைப்‌ பறிக்காதே’ என்று இந்த ஆரப்பாட்டத்தில பேசிய திமுக தலைவர்கள்‌ முழங்கினர்‌.

இத்த ஆர்ப்பாட்டத்தில்‌ பேசிய மு.க.ஸ்டாலின்‌, “சோலைவனம்போல்‌ உள்ள கோவை மண்டலம்‌ பாலைவனம்‌ ஆகிவிடக்கூடாது. நாடாளுமன்றத்தில்‌ அதிமுகவுக்கு 59 எம்‌.பி.க்கள்‌ உள்ளனர்.‌ ஆனாலும்‌, சிறுவாணி பிரச்சனையில்‌ அக்கறை செலுத்தவில்லை. திமுக ஆட்சியில்‌ இருந்தாலும்‌ இல்லாவிட்டாலும்‌ மக்களுக்காக குரல்‌ கொடுக்கும்‌ என்பதற்கு எடுத்துக்காட்டுதான்‌ இன்றைய போராட்டம்‌” என்றார். இன்று நாடாளுமன்றத்தில்‌ திமுகவுக்கும்‌ அதன்‌ கூட்டணி கட்சிகளுக்கும்‌ 50 எம்‌.பி.க.௧ள்‌ உள்ளது. தமிழகத்திலும்‌ திமுக ஆட்சி தான்‌ உள்ளது. ஆனால்‌, ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள்‌ முடியப்போகும்‌ நிலையிலும்‌ சிறுவாணி அணை பிரசசினையில்‌ திமுக அரசு எந்த அக்கறையும்‌, கவனமும்‌ செலுத்தவில்லை என்பது வேதனை அளக்கிறது.

இத்தனைக்கும்‌ கேரளத்தில்‌ திமுகவின்‌ மிக நெருங்கிய கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சி தலைமையிலான அரசுதான்‌ நடக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினின்‌ நெருங்கிய நண்பரான பினராயி விஜயன்‌ தான்‌ கேரள முதல்வராக இருக்கிறார். எனவே, இந்த வாய்ப்பைப்‌ பயன்படுத்தி சிறுவாணி அணையின்‌ முழு கொள்ளளவும்‌ தண்ணீரைத்‌ தேக்கவும்‌, சிறுவாணி ஆற்றின்‌ குறுக்கே புதிய அணை கட்டும்‌ கேரள அரசின்‌ முயற்சிகளைத்‌ தடுத்து நிறுத்தவும்‌ முதல்வர்‌ அவர்கள்‌ உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.இவ்வாறு அதில் தெரிவித்திருக்கிறார்.

Views: - 276

0

0