“ஏன் டி இப்படி அழுவுற“ TAKE IT EASY: பாலியல் புகாரளித்த பெண்ணை போனில் சமாதானம் செய்த பாஜக பிரமுகர்!! (ஆடியோ)

21 November 2020, 6:02 pm
Villupuram BJP - Updatenews360
Quick Share

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் மீது மகளிர் அணி நிர்வாகி பாலியல் புகார் அளித்துள்ள நிலையில் இருவரும் பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியை சேர்ந்த, பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் மாவட்டம் மகளிரணி பொதுச்செயலாளர் காயத்ரி என்பவர், விழுப்புரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான VAT. கலிவரதன் மீது, பாலியல் வன்கொடுமை மற்றும் பணமோசடி தொடர்பாக புகார் ஒன்றை தனது லெட்டர் பேடில் அனுப்பியதாக சமூக வலைதளங்களில் பரவிய புகைப்படம் இப்பகுதியில் காட்டு தீயாய் பரவி வருகிறது.

குறிப்பிட்ட அந்த ஆடியோவில், இதெல்லாம் இங்க பேசாத என மாவட்ட பாஜக தலைவர் கூற, அந்த பெண் அழுது கொண்டே புலம்புகிறார். ஏன்டி இப்படி அழுவுற TAKE IT EASY என கூறிய மாவட்ட பாஜக தலைவர் கலிவரதன், கட்சி வேலையை மட்டும் கவனி அது போதும், மத்ததெல்லாம் தானா வரும் என கூறி சமாதானம் செய்கிறார்.

இது தொடர்பான ஆடியோ வெளியாகி வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து பேசிய கலிவரதன், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிஜேபியின் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்பதற்காகவும் என் மீது வீண்பழி சுமத்தி, களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

பணம் வாங்கிக் கொண்டு பதவி போடவேண்டிய சூழலில் எங்கள் கட்சி இல்லை எனவும், பாஜக நேர்மையான கட்சி எனவும், ஆன்மீகமான கட்சி எனவும், ஒழுக்கமான கட்சி எனவும், விழுப்புரம் மாவட்டத்தில் நம்பர் ஒன் கட்சியாக பாஜக செயல்பட்டுக் கொண்டிருப்பதை தடுக்க வேண்டும் என்பதற்காக சூழ்ச்சியில் இறங்கியிருக்கிறார்கள் ஆகையால் என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள் என சமூக வலை தளங்களின் வாயிலாக வீடியோ பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.

Views: - 66

0

0