இந்து விரோதி வைரமுத்துவிற்கு ஒரு நியாயம்… கல்யாணராமனுக்கு ஒரு நியாயமா..? எச். ராஜா காட்டம்..!!

1 February 2021, 1:26 pm
Madurai H Raja- updatenews360
Quick Share

சென்னை : பாஜக நிர்வாகி கல்யாணராமனின் கைது நடவடிக்கைக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

உதகை மேட்டுப்பாளையத்தில் நபிகள் நாயகத்தைக் கொச்சைப்படுத்தி பாஜக பிரமுகர் கல்யாணராமன் பேசியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று இரவு சாலை மறியல் நடைபெற்றது. இதையடுத்து, கல்யாணராமன் உட்பட 10 பேர் மேட்டுப்பாளைய போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர் மீது கலவரம் ஏற்படுத்த முயற்சி, வெறுப்புப் பேச்சு உள்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவரது கைது நடவடிக்கைக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பாஜக பிரமுகர் எச். ராஜா காவல்துறையின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஆண்டாள் நாச்சியாரை அருவருக்கத்தக்க விதத்தில் விமர்சித்த இந்துவிரோதி வைரமுத்துவை கைது செய்யாத காவல்துறை கல்யாணராமனை கைது செய்துள்ளது பாரபட்சமானது. கண்டிக்கத் தக்கது,” எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0