வயலில் ஆடு மேய்ந்ததால் தகராறு: பாஜக நிர்வாகி வெட்டிப் படுகொலை…!!

3 November 2020, 1:19 pm
crime - updatenews360
Quick Share

தூத்துக்குடி அருகே வயலில் ஆடு மேய்ந்த விவகாரத்தில் பாஜக நிர்வாகி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவுக்கு உட்பட்ட தென் திருப்பேரை கோட்டூர் பகுதியில், வயலில் ஆடு மேய்ந்ததால், பாஜக மாவட்ட வர்த்தக அணி செயலாளர் இராமையாதாஸ் என்பவருக்கும், இசக்கி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மாவட்ட பாஜக வர்த்தக அணி செயலாளர் இராமையாதாஸ் டீக்கடை அருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் இருபெரும் சமூகத்தினர் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து,
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டார். மேலும் கொலையாளி இசக்கியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

வயலில் ஆடு மேய்ந்த விவகாரத்தில் பாஜக நிர்வாகி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியிவ் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 17

0

0