அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையீடு? தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம்!!

Author: Udayachandran
27 July 2021, 5:12 pm
annamalai -Updatenews360
Quick Share

சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையீடு என்ற தகவலுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.

டெல்லிக்கு தனித்தனியாக சென்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியயோர் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினர்.

இதையடுத்து டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கூட்டணியில் இருப்பதால் ஓபிஎஸ் – ஈபிஎஸ் பிரதமரை சந்தித்துள்ளனர். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையீடு என்பதில் உண்மையில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து கூறுகையில், இது தொடர்பாக நீதிமன்றம் நடுநிலையாக தீர்ப்பளிக்கும். அரசியல் காழ்புணர்ச்சியால் சோதனை செய்திருந்தால், அந்த வழக்கு நிற்காது என தெரிவித்துள்ளார்.

Views: - 184

0

0