கந்த ஷஸ்டி கவசத்திற்கு ஆதரவு தெரிவித்து வேல் பூஜை..! பாஜக அழைப்பு

8 August 2020, 7:25 pm
Quick Share

கருப்பர் கூட்டம் அமைப்பினருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பாஜகவினர் நாளை வேல் பூஜைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

கருப்பர் கூட்டம் என்ற பெயரில் நடத்தப்பட்ட யூ டியூப் சேனல் ஒன்றில், தமிழர்களின் கடவுளான முருகனின் கந்த சஷ்டி கவசம் குறித்து ஆபாசமாக சித்தரித்து வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது. பின்னர் எழுந்த சர்ச்சை காரணமாக அது நீக்கம் செய்யப்பட்டதாக தெரிகிறது.

இதற்கு பல்வேறு இந்து அமைப்புக்களை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து, செந்தில்வாசன் என்பவரை கைது செய்தனர்.

இந்த சூழலில், கந்த ஷஸ்டி கவசத்திற்கு ஆதரவு தெரிவித்தும், கருப்பர் கூட்டம் அமைப்பினருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் பாஜகவினர் நாளை வேல் பூஜைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் உள்ள முருக பக்தர்கள் அனைவரும் நாளை மாலை 6.01 மணியளவில் வீடுகளில் வேல் பூஜை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மத நல்லிணக்கத்திற்கு எதிரான சக்திகளை முறியடிப்போம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 2

0

0