ஆளுநராக பதவியேற்க உள்ள ஆர்.என்.ரவியுடன் பாஜக தலைவர்கள் சந்திப்பு

Author: Udhayakumar Raman
17 September 2021, 9:27 pm
Quick Share

தமிழகத்தில் புதிய ஆளுநராக நாளை பதவியேற்க உள்ள ஆர்.என்.ரவியை முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி சண்மையில் நியமனம் செய்யப்பட்டார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என்.ரவி உளவுத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர். தமிழக புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி நாளை ஆளுநராக பதவியேற்க உள்ளார். சென்னை வந்த அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் நேரில் சென்று வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியேற்பு நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் என 500 பேர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதவியேற்க உள்ள ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Views: - 133

0

0