‘திமுகவுக்கா ஓட்டுப்போட்டோம்’… மக்களை விரக்திக்கு தள்ளும் திராவிட மாடல் ஆட்சி : பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
2 September 2022, 12:47 pm
stalin - vanathi srinivasan - updatenews360
Quick Share

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை ஒழிக்க மத்திய அமைப்புகளுடன் இணைந்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசும் போது :- தமிழகத்தினுடைய அரசியல் சூழ்நிலை வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல வாக்களிக்காதவர்களும், ஏன் இந்த அரசாங்கத்திற்கு வாக்களிக்கவில்லை என்கின்ற விதத்தில் ஆட்சி நடத்துவோம் என தமிழகத்தினுடைய முதல்வர் அறிவித்தார்.

ஆனால் தற்போதைய சூழல் வாக்களித்தவர்கள் கூட ஏன் இந்த கட்சிக்கு வாக்களித்தோம் என்று எண்ணுகின்ற சூழலில் தான் தமிழகத்தினுடைய அரசியல் சூழல் இருக்கிறது என வேதனை தெரிவித்தனர்.

மேலும், போதை பொருட்கள் நடமாட்டம் கஞ்சா என்பது எல்லா மாவட்டங்களிலும் கல்லூரி, பள்ளி மாணவர்கள் கையில் புழக்கம் அதிகமாக இருக்கக்கூடிய சூழல் இருந்து கொண்டிருக்கிறது. வெறுமனையாக போதைப் பொருளுக்கு எதிராக அவர்கள் எடுத்துக்கொண்ட வாக்குறுதி மற்றும் உறுதிமொழி என்பது போதாது. இது மிக மிகக் கடுமையான நடவடிக்கையின் வாயிலாக தான் கட்டுப்படுத்த முடியும். தேவைப்பட்டால் மத்தியில் இருக்கக்கூடிய அமைப்புகளோடு கூட மாநிலத்தினுடைய முதல்வர் கலந்து பேசி அண்டை மாநிலங்கள் வழியாக வரக்கூடிய இந்த போதைப் பொருளுக்கு தகுந்த முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை, என்றார்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு காவல்துறை செயலிழந்து கொண்டிருக்கிறதா என்ற ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், அதேபோல அதிகமான குற்ற வழக்குகள் பதிவாகக்கூடிய ஒரு சூழல் இருக்கிறது. அதுவும் ஒரு காரணம், என வானதி சீனிவாசன் எம்எல்ஏ குற்றம் சாட்டினார்.

Views: - 153

0

0