6 நாட்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அனுமதி மறுப்பு..! ஹெச். ராஜா கடும் கண்டனம்

14 August 2020, 9:16 pm
H raja 1 - updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் 6 நாட்கள் சமூக இடைவெளியுடன் சதுர்த்தி விழா கொண்டாட இந்துக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறி உள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது ஹெச்.ராஜா கூறியதாவது: வாரத்தில் 6 நாட்கள் அரசு மதுக்கடைகள் இயங்க தமிழகத்தில் அனுமதி உள்ளது.

மதுக்கடைகளில் தினமும் எந்த சமூக இடைவெளியும் இன்றி மதுபிரியர்கள் மதுபானங்களை வாங்குகின்றனர். அதற்கு அரசானது அனுமதி வழங்கி உள்ளது.

ஆனால் தமிழகத்தில் ஆண்டுக்கு 6 நாட்கள் சமூக இடைவெளியோடு விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த முடிவை தமிழக அரசானது உடனடியாக வாபஸ் பெற வேண்டும். மத சுதந்திரத்தில் தலையிடுவது போன்று உள்ளது அரசின் செயல். மத சடங்குகளில் தலையிடுவதற்கு அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்று கூறி உள்ளார்.