திண்டுக்கல் ; குஜராத்தில் இதுவரை எந்த கட்சியும் செய்யாத சாதனையை பாஜக செய்துள்ளதாகவும், தனியார் மையத்தை கொண்டு வந்ததே காங்கிரஸ்தான் என்று நத்தத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ரவுண்டானா அருகே குஜராத்தில் பாஜக அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக பொதுச்செயலாளர் சீனிவாசன் கூறியதாவது ;- குஜராத்தில் வரலாறு காணாத சாதனையை பாஜக செய்துள்ளது. இதுவரை காங்கிரஸ் இந்த சாதனையை செய்ததில்லை. இதுபோல், எந்த கட்சியும் சாதனைகள் இது செய்தது இல்லை. தொடர்ந்து 7வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைத்திருக்கிறது பாஜக. குறிப்பாக இது மாதிரியான வெற்றிகள் தமிழ்நாட்டில் பெரிய தாக்கத்தை உருவாக்கும்.
எல்பிஜி என்ற ஒரு ஃபார்முலாவை கொண்டு வந்ததே காங்கிரஸ்தான். 91இல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, அப்பொழுது மன்மோகன்சிங் நிதி அமைச்சராக இருந்தார். அப்பொழுதுதான் கொண்டு வந்தார். தற்போது, கேரளாவில் தனியார் மையம் இல்லையா? இன்று கூட மேற்கு வங்காளத்தில் பவர் டிஸ்ட்ரிபியூஷன் தனியார் மையமாகத்தான் உள்ளது. இன்று தமிழ்நாட்டை விட கேரளாவில் தனியார் பேருந்துகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தனியார் பங்களிப்பினை இதை பிஜேபி மட்டும் செய்வது என்பது தேவையில்லாத குற்றச்சாட்டு ஆகும்.
இதை தனியார் மையம் என்று சொல்வதை விட தனியார் பங்களிப்பு என்று பிஜேபி பார்க்கிறது. டெல்லியில் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் கட்சி ஆம் ஆத்மி கட்சி 2வது முறையாக ஆட்சியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு டெல்லியில் செல்வாக்கு உள்ளது. அதை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். பாஜகவும் 104 இடங்களை கைப்பற்றி உள்ளது என்பதையும் மறக்கக்கூடாது.
தமிழ்நாட்டில் ஒரு மகிழ்ச்சியான செய்தி. தேர்தல் முடிவுகளில் தமிழக மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள 29 வார்டுகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் உள்ள தமிழர்களுக்கு தங்களுக்கு உகந்த கட்சி பாஜக தான் என்பதை உணர்ந்ததால் தான், 29 வார்டுகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தமிழனும் விரைவில் உணர்வார்கள், இவ்வாறு அவர் பேசினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.