திமுக பிரமுகரை கைது செய்ய கோரி பாஜக ஆர்ப்பாட்டம் : திடீரென அருள் வந்து சாமி ஆடிய பெண்ணால் பரபரப்பு!
திருவண்ணாமலை, அண்ணா சிலை முன்பு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் அண்ணாமலையார் கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளரை தாக்கிய திமுக முன்னாள் நகரமன்ற தலைவரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான ஸ்ரீதரன், அவரது துணைவியார் சிவசங்கரி, உதவியாளர் ரமேஷ் ஆகியோரை கைது செய்ய கோரியும், அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் பதவி நீக்கம் செய்ய கோரியும் மாநில பொது செயலாளர் கார்த்தியாயினி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்குவது அண்ணாமலையார் கோவிலாகும். அண்ணாமலையார் கோவிலில் கடந்த டிசம்பர் மாதம் 27ம் தேதி ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். அப்போது அண்ணாமலையார் கோவில் உண்ணாமுலை அம்மன் சன்னதி அருகே தேசூர் காவல் நிலைய ஆய்வாளர் காந்திமதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது திமுக முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதர் அவரது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது அவர்கள் சன்னதியின் நடுவில் நின்றதால் பின்னால் உள்ள பக்தர்கள் சாமி பார்க்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவல் ஆய்வாளர் காந்திமதி சற்று தள்ளி நிர்க்குமாறு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதர் பெண் ஆய்வாளரை கண்ணத்தில் அரைந்துள்ளார். இது குறித்து திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்ட மூன்று நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இருப்பினும் அவர்கள் கைது செய்யப்படாத நிலையில் பெண் காவல் ஆய்வாளரை தாக்கிய நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி இன்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் காத்தியாயினி தலைமையில் 300க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தை தொடங்கிய பாஜகவினர் கூட்டத்தில் தீடிரென பெண் ஒருவருக்கு சாமி வந்து ஆடினார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.