அனுமதியின்றி கிறிஸ்தவ ஆலயம் எழுப்ப முயற்சி : போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது !!

19 June 2021, 8:33 pm
bjp protest - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : திருவட்டார் அருகே முறையான அரசு அனுமதியின்றி கிறிஸ்தவ ஆலயம் கட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குமரி மாவட்டம் திருவட்டார் ஒன்றியம் மாத்தூர் தொட்டில்பாலம் அருகில் அரசு அனுமதியின்றி கிறிஸ்தவ ஆலயம் ஒன்று எழுப்பப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அப்பகுதியில் பாஜகவினர் ஆங்காங்கே தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க மாவட்ட தலைவர் தர்மராஜன் ,மூன்று மாவட்ட ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் முத்துக்குமார், இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசா சோமன் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். மா.ஜ.க-வினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 313

1

0