தூத்துக்குடி-சட்டபேரவையில் திமுகவின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிர்ப்பு காட்டப்படும் என்று பாஜக எம்எல்ஏ எம்.ஆர் காந்தி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் பொது மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பாஜக தூத்துக்குடி மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர் காந்தி கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வுக்கு எதிராகவும், திமுகவின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. சூரிய மின்சாரம் கிடைக்கும் போது, மின் கட்டணம் உயர்வு எதற்கு..? காற்றாலை மின்சாரம் கிடைக்கும்போது மின் கட்டண உயர்வு எதற்கு…? மின்சார துறையில் ஊழல் செய்வது, திமுக பணியை ஏற்பது மக்களா..? என்பது போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கையில் ஏந்தி இருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி கூறியதாவது :- தமிழகத்தில் வருகின்ற ஒரு சில மாதங்களில் மின்சார துறையில் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு காரணமாக மின்சார துறையானது ஏறத்தாழ ஒரு லட்சத்து 32,000-க்கு அதிகமான ரூபாய் கடன் இருக்கிறது. எனவே அந்த கடனை எதிர்பார்த்து ஒவ்வொரு வங்கிகளும் கடன் கொடுப்பதில்லை.
வருமானத்தை பெறுவதற்கும் கட்டணத்தை கூட்ட வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. தமிழகத்தினுடைய மின்சார துறை அமைச்சர் ஆரம்பித்திருக்கிறார்கள். தங்களது துறையை சரியான முறை நடவடிக்கை எடுத்து இருந்தால், கட்டணங்களை கூட்டாத ஒரு சூழ்நிலையை உருவாக்கி இருக்க முடியும்.
ஆனால் எதற்கெடுத்தாலும் அவர்கள் மத்திய அரசாங்கத்தை சொல்வது மத்திய அரசாங்கத்தினுடைய அறிவுறுத்தல்படி தான், நாங்கள் மின்சார கட்டணத்தை உயர்த்தகிறோம் என்று சொல்லுகிறார்கள். ஆனால் மத்திய அரசாங்கம் சொல்லுகிறது நீங்கள் கட்டணங்களை வசூல் செய்வதுகூட ஸ்மார்ட் மீட்டர் வைக்கப்பட வேண்டும். அவர்களுக்கு கட்டணங்களை மாதம் தோறும் ஒழுங்கான முறையில் கணக்கெடுக்கப்பட வேண்டும் என்று சொல்லுகிறது.
ஆனால் இவர்கள் மாதந்தோறும் கணக்கெடுக்காமல் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கணக்கெடுத்தால், 100 யூனிட் மின்சாரம் இலவசமாக கொடுப்பதில் இருந்து தப்பித்து விடலாம் என்று கணக்கை திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு செயல்படுத்தி வருகிறது. எனவே, மாதம் தோறும் கணக்கெடுக்கப்பட வேண்டும்.
மாதந்தோறும் கணக்கெடுப்பது ஸ்மார்ட் மீட்டர் மூலமாக கணக்கெடுக்கப்பட வேண்டும் என்று நாம் கோரிக்கை வைக்கின்ற பொழுது, ஸ்மார்ட் மீட்டர்கள் கொடுக்கப்பட்டால் வேலைவாய்ப்பு இழந்து விடுவோம் என்று சொல்லுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை கம்ப்யூட்டர்கள் பயன்படுத்துகின்ற பொழுதும் சொன்னார்கள். ஆனால் இன்றைக்கு கம்ப்யூட்டருக்கு அதிகமாக பயன்படுத்த பிறகும் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
எனவே தமிழக அரசு உடனடியாக ஸ்மார்ட் மீட்டர்களை பயன்படுத்த வேண்டும். மாதந்தோறும் கணக்கெடுத்து 100 யூனிட் இலவசத்தை கொடுக்கப்பட வேண்டும் என்று பாரதி ஜனதா கட்சி சார்பில் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், என தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் பாஜக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வீரமணி மாநில செயற்குழு உறுப்பினர் பால்ராஜ் ஐ டி அணி மாவட்ட தலைவர் காளிராஜா, மாவட்ட துணைத் தலைவர்கள் எஸ்.பி.வாரியர், சுபேதார், மாவட்ட பொதுச் செயலாளர்கள் சத்தியசீலன், சிவமுருகன், ராஜா, மாவட்ட பொருளாளர் சணமுகசுந்தரம், மாவட்ட மகளிர் அணி தலைவர் தேன்மொழி, துணைத் தலைவர் உஷாதேவி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் சந்தனகுமார், பி.எம். பால்ராஜ், ஓ.பி.சி., அணி மாநில செயலாளர் விவேகம் ரமேஷ், ஓ.பி.சி., அணி மாவட்ட தலைவர் பாலகுமரேசன், நிர்வாகிகள் காளிராஜன், வழக்கறிஞர் சின்னதம்பி, தேவகுமார், சுரேஷ்குமார், பட்சிராஜன், முத்துராமலிங்கம், ராஜேஸ்கனி, வினோத், மாதவன், சிவ கனேஷ்,மேற்கு மண்டல துணை தலைவர் தனலெட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
LGBTQIA அமைப்பினர் குறித்து சர்ச்சை கருத்து கூறிய திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 12ஆம் தேதி கோவை வேளாண் பல்கலைக்…
திருச்சி தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் நடிகர் விஜயின் 51 வது…
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 2வது எடஸ்ட் போட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸ் இந்திய அணி 587 ரன்கள்…
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில்…
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு…
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22). இவர் நண்பர்களுடன்…
This website uses cookies.